2023 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் தமிழ்நாடு மாநில அரசு பெறும் கடன்
January 2 , 2024 328 days 324 0
2023-24 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 37,000 கோடி ரூபாய் கடன் வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
வருவாய்-செலவின இடைவெளியை (நிதிப் பற்றாக்குறை) குறைப்பதற்கு, மாநில மேம்பாட்டுக் கடன்கள் (SDLs) எனப்படும் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் மாநில அரசு சந்தையில் இருந்து கடன் பெற உள்ளது.
இது மாநில அரசின் மொத்த நிலுவைக் கடன்களில் பெரும்பகுதியை உருவாக்குகிறது.
2023-24 ஆம் நிதியாண்டில் இதுவரையில் (டிசம்பர் மாதம் வரை), மாநில அரசு 76,000 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.