TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டில் இணைய முடக்கங்கள்

May 20 , 2024 59 days 193 0
  • அக்சஸ் நௌ நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு முதல் உலகளவில் 1,458 முடக்கங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும், அவற்றில் சுமார் 773 (53%) இந்தியாவில் பதிவாகி உள்ளதாகவும் கூறியுள்ளது.
  • தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, 2023 ஆம் ஆண்டில் 116 இணைய முடக்கங்களுடன் இந்தியா உலகளாவிய இணைய முடக்கங்களில் முன்னணியில் உள்ளது.
  • உலகளவில் பதிவான 283 முடக்கங்களில் 41% பங்கினைக் கொண்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், 201 ஆக இருந்த இணைய முடக்கங்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 283 ஆக உயர்ந்தது.
  • இந்தியாவில், சுமார் 64 இணைய முடக்கங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களை பாதித்தன.
  • இது மணிப்பூரில் பதிவான 47 இணைய முடக்கங்கள் மற்றும் பஞ்சாபில் ஏற்பட்ட மாநிலம் தழுவிய இணைய முடக்கம் ஆகியவற்றால் குறிப்பிடப்படுகிறது.
  • இந்தியாவில் 13 மாநிலங்கள் உள்ளூர் அல்லது மாநிலம் தழுவிய அளவில் இணைய முடக்கங்கள் பதிவாகின.
  • 2022 ஆம் ஆண்டில் 3 ஆக இருந்த ஐந்திற்கும் அதிகமான இணைய தள முடக்கங்கங்களுடன் கூடிய இந்திய மாநிலங்களின் எண்ணிக்கையானது 2023 ஆம் ஆண்டில் 7 ஆக அதிகரித்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் 15% ஆக இருந்த ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் நீடித்த இந்தியாவின் அனைத்து இணைய முடக்கங்கள் 41% அதிகரித்தது.
  • 2023 ஆம் ஆண்டில், மியான்மர் 37 இணைய தள முடக்கங்களுடன் இந்தியாவினைத் தொடர்ந்து இடம் பெற்றுள்ளது என்ற நிலையில் அதனைத் தொடர்ந்து 34 இணைய தள முடக்கங்களுடன் ஈரான் இடம் பெற்றுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில், 39 நாடுகளில் இணைய முடக்கங்கள் பதிவாகின என்ற நிலையில்  பாகிஸ்தானில் 7 இணைய தள முடக்கங்களும், ஈராக்கில் 6 இணைய முடக்கங்களும் பதிவாகின.
  • இந்தியா உட்பட ஆறு நாடுகளில் பன்னிரண்டு இணைய முடக்கங்கள் தேர்வுகளில் ஏய்ப்பு நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்