TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் பண வரவு

July 2 , 2024 16 days 149 0
  • 2023 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 18.7 மில்லியன் மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.
  • 2023 ஆம் ஆண்டில் 7.5% ஆக வளர்ச்சியடைந்த இந்தியாவின் பண வரவு ஆனது, 2024 ஆம் ஆண்டில் 3.7% ஆக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி மதிப்பீடு 4% ஆகும்.
  • 2023 ஆம் ஆண்டில் இந்தியா 120 பில்லியன் டாலர் பண வரவினைப் பெற்றது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான பண வரவு எதிர்பார்ப்பு ஆனது 124 பில்லியன் டாலர் மற்றும் 2025 ஆம் ஆண்டில் 129 பில்லியன் டாலர் ஆகும்.
  • 2023 ஆம் ஆண்டில் அதிகப் பண வரவினைப் பெற்ற நாடு இந்தியாவாகும்.
  • அதைத் தொடர்ந்து மெக்சிகோ 66 பில்லியன் டாலர், சீனா 50 பில்லியன் டாலர், பிலிப்பைன்ஸ் 39 பில்லியன் டாலர், பாகிஸ்தான் 27 பில்லியன் டாலர் பண வரவினைப் பெற்றுள்ளன.
  • இந்தியாவின் பணப் பரிமாற்றத்தில் 18% ஆனது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வருகிறது.
  • சவுதி அரேபியா, குவைத், ஓமன் மற்றும் கத்தார் ஆகியவை இந்தியாவின் மொத்தப் பணப் பரிமாற்றத்தில் 11% பங்கைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்