2023 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 18.7 மில்லியன் மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் 7.5% ஆக வளர்ச்சியடைந்த இந்தியாவின் பண வரவு ஆனது, 2024 ஆம் ஆண்டில் 3.7% ஆக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி மதிப்பீடு 4% ஆகும்.
2023 ஆம் ஆண்டில் இந்தியா 120 பில்லியன் டாலர் பண வரவினைப் பெற்றது.
2024 ஆம் ஆண்டிற்கான பண வரவு எதிர்பார்ப்பு ஆனது 124 பில்லியன் டாலர் மற்றும் 2025 ஆம் ஆண்டில் 129 பில்லியன் டாலர் ஆகும்.
2023 ஆம் ஆண்டில் அதிகப் பண வரவினைப் பெற்ற நாடு இந்தியாவாகும்.
அதைத் தொடர்ந்து மெக்சிகோ 66 பில்லியன் டாலர், சீனா 50 பில்லியன் டாலர், பிலிப்பைன்ஸ் 39 பில்லியன் டாலர், பாகிஸ்தான் 27 பில்லியன் டாலர் பண வரவினைப் பெற்றுள்ளன.
இந்தியாவின் பணப் பரிமாற்றத்தில் 18% ஆனது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வருகிறது.
சவுதி அரேபியா, குவைத், ஓமன் மற்றும் கத்தார் ஆகியவை இந்தியாவின் மொத்தப் பணப் பரிமாற்றத்தில் 11% பங்கைக் கொண்டுள்ளன.