உலகிலேயே வேளாண் பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் எட்டாவது நாடாக இந்தியா தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் சுமார்55 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் வேளாண் ஏற்றுமதியானது 2023 ஆம் ஆண்டில் 51 பில்லியன் டாலராகக் குறைந்தது.
ஒட்டு மொத்தமாக, ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள பத்து நாடுகள் 2023 ஆம் ஆண்டில் உலக ஏற்றுமதியில் 71.9 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளன.
இந்திய நாடானது 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் பதிவான கோதுமையின் ஏற்றுமதி மீதும், 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பாஸ்மதி ரகம் சாராத அரிசியின் ஏற்றுமதிக்கும் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சர்க்கரையின் ஏற்றுமதிக்கும் தடை விதித்தது.
2022 ஆம் ஆண்டில் 799 பில்லியனாக இருந்த அளவினை விட 2023 ஆம் ஆண்டில் 836 பில்லியன் டாலர் மதிப்பிலான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் தனது முன்னணி நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அமெரிக்காவானது 198 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வேளாண் பொருட்கள் ஏற்றுமதியுடன் 2023 ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்தில் தொடர்ந்து இடம் பெற்று உள்ளது.
பிரேசில் 2023 ஆம் ஆண்டில் 157 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் நான்காவது பெரிய வேளாண் பொருட்கள் ஏற்றுமதியாளராக சீனா திகழ்ந்தது.
வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் உலகளவில் முன்னணியில் உள்ள பத்து நாடுகளில் கனடா, மெக்சிகோ, இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை அடங்கும்.