2023 ஆம் ஆண்டில் உலகின் அதிகபட்ச சூரிய சக்தி உற்பத்தி
October 19 , 2024 35 days 105 0
2023 ஆம் ஆண்டில், உலகளாவியப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி திறன் 3.9 டெரா வாட்களை (TW) எட்டிய நிலையில் இது 2022 ஆம் ஆண்டில் 3.86 TW ஆக இருந்தது.
இருப்பினும், இது தற்போது தேவையான கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதமான 16.4 சதவீதத்தினை விட குறைவாக உள்ளது என்பதோடு தற்போதைய உற்பத்தி வேகம் நீடித்தால் 2030 ஆம் ஆண்டிற்குள் 1.5 TW இடைவெளியை ஏற்படுத்தும்.
2023 ஆம் ஆண்டில் உலகளவில் 473 ஜிகாவாட் (GW) புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் உற்பத்தி செய்யப்பட்டது.
சூரியசக்தி ஒளி மின்னழுத்தக் கட்டமைப்பு சார்ந்த மின் உற்பத்தி தொடர்ந்து அதிக அளவில் உள்ளது என்ற நிலையில் 2023 ஆம் ஆண்டில் 346.9 GW உற்பத்தி செய்யப் பட்டது என்பதோடு இது 2022 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 73% அதிகரிப்பைக் குறிக்கிறது.