2023 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானை முந்தி, மியான்மர் உலகின் முன்னணி அபின் உற்பத்தியாளராக மாறியுள்ளது.
2022 ஆம் ஆண்டில் தலிபான்கள் அறிவித்த போதைப் பொருள் தடைக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் அபினி (ஓபியம்) சாகுபடியில் ஏற்பட்ட 95 சதவிகித சரிவானது மியான்மர் நாட்டிற்கு உலகளவில் விநியோகம் செய்வதற்கானப் பெரு வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அபினி செடி (ஓபியம் பாப்பி) சாகுபடியானது, தற்போது சுமார் 75% வரை அதிக லாபம் ஈட்டுகிறது.
அபினி செடிகளின் சராசரி விலையானது, ஒரு கிலோவிற்கு தோராயமாக 355 டாலர் ஆக உயர்ந்துள்ளது.
இதன் சாகுபடி பரப்பு ஆனது, ஆண்டிற்கு ஆண்டு 18% அதிகரித்து, 47,000 ஹெக்டேரை எட்டியுள்ளது.
இது 2001 ஆம் ஆண்டிலிருந்து பதிவான அதிக அளவில் சாத்தியமான விளைச்சலைக் குறிக்கிறது.