2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அமேசான் காடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயின் அளவானது 10 சதவீதம் அதிகமாகும்.
2007 ஆம் ஆண்டில் அமேசானில் உருவான காட்டுத் தீயினை விட 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீயானது மிக உயர்ந்த அளவிலான உச்சக் கட்டத்தை அடைந்தது.
2022 ஆம் ஆண்டில் 39 சதவீதமாக இருந்த காடழிப்பு தொடர்பான தீ விபத்துகள், 2023 ஆம் ஆண்டு ஜனவரி-ஜூன் காலக் கட்டத்தில் 19 சதவீத தீ விபத்துகள் ஆக குறைந்து உள்ளன.
இந்த ஆண்டு எல்நினோவால் ஏற்பட்ட வெப்பம் மற்றும் வறண்டக் காலநிலைகளும் இந்த நிகழ்வானது ஏற்பட காரணமாக உள்ளன.
2023 ஆம் ஆண்டில் காடழிப்பு விகிதமானது குறைந்து வருவதோடு, 2022 ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் ஜூலை ஆகியவற்றுக்கு இடையே நிகழந்ததை விட 42 சதவீதம் குறைவாகவே உள்ளது.