TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டில் கருங்காய்ச்சல் பாதிப்புகள்

March 1 , 2024 272 days 345 0
  • 2023 ஆம் ஆண்டில் அனைத்து தொகுதிகளிலும் 10,000 மக்கள்தொகைக்கு ஒன்றுக்கும் குறைவான பாதிப்புகள் பதிவு என்ற இலக்கை இந்தியா அடைந்துள்ளது.
  • கடந்த ஆண்டில் நாடு முழுவதும் பதிவான 891 பாதிப்புகள் மற்றும் நான்கு உயிர் இழப்புகளுடன் ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டில் 595 பாதிப்புகள் மற்றும் மூன்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
  • இந்தியாவில் கருங்காய்ச்சல் பாதிப்புகளை ஒழிப்பதற்கான ஆரம்பகட்ட இலக்கு ஆண்டு 2010 ஆகும் என்ற நிலையில் இது பின்னர் 2015, 2017 ஆண்டாகவும் மற்றும் பின்னர் 2020 ஆம் ஆண்டாகவும் நீட்டிக்கப் பட்டது.
  • கருங்காய்ச்சல் (அல்லது உள்ளுறுப்பு லீஷ்மேனியாசிஸ்) என்பது மணல் ஈக்களால் பரவும் ஒரு ஒட்டுண்ணி சார் தொற்று ஆகும்.
  • உலக சுகாதார அமைப்பின் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களுக்கான செயல் திட்டத்தில் இந்த நோயினை ஒழிப்பதற்கான இலக்கு 2030 ஆம் ஆண்டாக நிர்ணயிக்கப் பட்டிருந்தாலும், தற்போது கருங்காய்ச்சலினை 2023 ஆம் ஆண்டிற்குள் ஒழிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்