TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டில் தென் தமிழகத்தில் பதிவான வரலாறு காணாத மழை

December 22 , 2023 339 days 315 0
  • தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதியன்று வரலாறு காணாத அளவிலான மழைப்பொழிவு பதிவானது.
  • 39 பகுதிகளில் மிக அதிக மழை பெய்துள்ளது.
  • தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில் முறையே 69 செ.மீ மற்றும் 62 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
  • திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் 55 சென்டிமீட்டரும், மூலைக்கரைப் பட்டியில் 61 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளன.
  • 1992 ஆம் ஆண்டில் காக்காச்சியில் (மாஞ்சோலை) 96.5 சென்டிமீட்டர் மழை பதிவானதற்குப் பிறகு இரண்டாவது அதிக மழைப்பொழிவு இந்த ஆண்டில் பதிவாகி உள்ளது.
  • 21 சென்டிமீட்டருக்கு மேல் மற்றும் அதற்கு மேற்பட்ட மழைப்பொழிவு ஆனது மிகவும் கனமழை என்று வகைப்படுத்தப்படுகிறது.
  • 12 முதல் 20 சென்டிமீட்டர் வரையிலான மழைப்பொழிவு அதி கனமழை எனவும், 7 முதல் 11 சென்டிமீட்டர் வரையிலான மழைப்பொழிவு கனமழை எனவும் விவரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்