2023 ஆம் ஆண்டில் புதிய முறைசார் வேலைவாய்ப்புகள் குறைவு
December 9 , 2023 351 days 257 0
இது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சமீபத்தியத் தரவு ஆகும்.
இது 2023-24 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் புதிய சந்தாதாரர்களில் 10.1% என்ற அளவு சரிவு பதிவாகியுள்ளதை வெளிப்படுத்துகிறது என்பதோடு இது முறைசார் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் உள்ள மந்தநிலையையும் குறிக்கிறது.
18 முதல் 28 வயதிற்குட்பட்ட சந்தாதாரர்களில் பதிவான 9.54% சரிவு என்பது கவலைக் கொள்ள வைக்கும் வகையிலான போக்கு ஆகும்.
இந்த வயதுப் பிரிவினர், பொதுவாக வேலைவாய்ப்புச் சந்தையில் முதல் முறையாக நுழையும் பிரிவுடன் தொடர்புடைய மக்கள்தொகை ஆகும்.
பெண் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் 11.1% குறைந்துள்ளதாகவும் இந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.