2023 ஆம் ஆண்டில் பெண்கள், வணிகம் மற்றும் சட்டம் என்ற அறிக்கை
March 7 , 2023 629 days 347 0
2023 ஆம் ஆண்டின் பெண்கள், வணிகம் மற்றும் சட்டம் என்ற அறிக்கையானது உலக வங்கி வெளியிடுகின்ற வருடாந்திர அறிக்கைகளில் 9வது ஆண்டு அறிக்கையாகும்.
இது 190 நாடுகளில் உள்ள பெண்களின் பொருளாதாரம் சார்ந்த மூக்கிய வாய்ப்பைப் பாதிக்கும் சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் குறித்து ஆய்வு செய்கிறது.
இது போக்குவரத்து, பணியிடம், ஊதியம், திருமணம், பெற்றோர் அந்தஸ்து, தொழில் முனைவு, சொத்துக்கள் மற்றும் ஓய்வூதியம் போன்ற முக்கிய எட்டு குறிகாட்டிகளைக் கொண்டுள்ளது.
இந்தக் குறியீட்டில் 100 என்ற அதிக மதிப்பெண் என்பது ஆண்களுக்கு நிகரான ஒரு நிலையில் பெண்கள் இருப்பதைக் குறிக்கிறது.
இதில் 14 நாடுகள் மட்டுமே 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.
இதில் இந்தியா தற்போது 74.4 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், இது தெற்காசியப் பிராந்தியத்திற்கான சராசரியான 63.7 என்ற மதிப்பினை விட அதிகமாக உள்ளது.
ஆனால் இது தெற்காசியப் பிராந்தியத்தின் அதிகபட்ச மதிப்பெண்ணான 80.6 பெற்ற நேபாளத்தை விட குறைவாகவே உள்ளது.
மும்பை பகுதியில் பொருந்தக் கூடிய சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் குறித்தத் தரவுகளை இந்தக் குறியீடு இந்தியாவிற்கான மதிப்பீட்டிற்காகப் பயன்படுத்தியது.
2022 ஆம் ஆண்டில், உலக நாடுகளின் சராசரி மதிப்பெண் 100க்கு 76.5 ஆகும்.