UNODC (போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் அலுவலகம்) ஆனது “2023 ஆம் ஆண்டில் பெண் கொலைகள்: துணைவியர்/குடும்ப உறுப்பினராக உள்ள பெண்களின் கொலைகள் பற்றிய ஒரு உலகளாவிய மதிப்பீடுகள்” என்ற ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் மட்டும் உலகளவில் 85,000 பெண்கள் மற்றும் சிறுமிகள் திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு நாளும், (ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு மரணம் என்ற வீதத்தில்) மிகச் சராசரியாக சுமார் 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் அவர்களின் நம்பிக்கைக்கு உரிய ஒருவரால் கொல்லப்பட்டனர்.
2022 ஆம் ஆண்டில் பதிவான 48,800 என்ற எண்ணிக்கையினை விட 2023 ஆம் ஆண்டில் பதிவான மதிப்பீடு அதிகமாகும்.
2023 ஆம் ஆண்டில் துணைவர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்ட 21,700 பெண்கள் மற்றும் சிறுமிகளுடன், ஆப்பிரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான பெண் கொலைகள் பாதிவாகியுள்ளது.
அதன் மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில், 100,000 நபர்களுக்கு சுமார் 2.9 பேர் என்ற விகிதத்தில், இந்தக் கண்டம் மிக அதிகமானப் பெண் கொலை விகிதத்தைக் கொண்டு உள்ளது.
அதனைத் தொடர்ந்து 100,000 நபர்களுக்கு முறையே 1.6 மற்றும் 1.5 என்ற விகிதத்தில் அமெரிக்கா மற்றும் ஓசியானியா இடம் பெற்றுள்ளன.
ஆசியா மற்றும் ஐரோப்பாவில் 100,000 நபர்களுக்கு சுமார் 0.8 மற்றும் 0.6 என்ற அளவில் குறைந்த விகிதங்கள் பதிவாகியுள்ளன.