TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டில் பெண் கொலைகள்

December 7 , 2024 15 days 99 0
  • UNODC (போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் அலுவலகம்) ஆனது “2023 ஆம் ஆண்டில் பெண் கொலைகள்: துணைவியர்/குடும்ப உறுப்பினராக உள்ள பெண்களின் கொலைகள் பற்றிய ஒரு உலகளாவிய மதிப்பீடுகள்” என்ற ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் மட்டும் உலகளவில் 85,000 பெண்கள் மற்றும் சிறுமிகள் திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
  • ஒவ்வொரு நாளும், (ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு மரணம் என்ற வீதத்தில்) மிகச் சராசரியாக சுமார் 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் அவர்களின் நம்பிக்கைக்கு உரிய ஒருவரால் கொல்லப்பட்டனர்.
  • 2022 ஆம் ஆண்டில் பதிவான 48,800 என்ற எண்ணிக்கையினை விட 2023 ஆம் ஆண்டில் பதிவான மதிப்பீடு அதிகமாகும்.
  • 2023 ஆம் ஆண்டில் துணைவர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்ட 21,700 பெண்கள் மற்றும் சிறுமிகளுடன், ஆப்பிரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான பெண் கொலைகள் பாதிவாகியுள்ளது.
  • அதன் மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில், 100,000 நபர்களுக்கு சுமார் 2.9 பேர் என்ற விகிதத்தில், இந்தக் கண்டம் மிக அதிகமானப் பெண் கொலை விகிதத்தைக் கொண்டு உள்ளது.
  • அதனைத் தொடர்ந்து 100,000 நபர்களுக்கு முறையே 1.6 மற்றும் 1.5 என்ற விகிதத்தில் அமெரிக்கா மற்றும் ஓசியானியா இடம் பெற்றுள்ளன.
  • ஆசியா மற்றும் ஐரோப்பாவில் 100,000 நபர்களுக்கு சுமார் 0.8 மற்றும் 0.6 என்ற அளவில் குறைந்த விகிதங்கள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்