TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்

November 28 , 2023 363 days 378 0
  • நவம்பர் 18 ஆம் தேதியன்று நடைபெற்ற தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டத் தொடரில், ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப் பட்டன.
  • இந்த மசோதாக்களில் பெரும்பாலானவை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுநர் அலுவலகத்தில் நிலுவையில் இருந்தன.
  • மாநிலப் பல்கலைக் கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக முதல்வர் நியமிக்கப் படுவது தொடர்பான விதிமுறைகளும் இதில் அடங்கும்.
  • ஆளுநரின் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான அதிகாரத்தை மட்டுமே எடுத்து மாநில அரசுக்கு வழங்குவதற்கு இந்த மசோதாக்கள் முயல்கின்றன.
  • இது தொடர்பாக, "ஆளுநர்" என்ற சொல் "அரசு" என்ற சொல்லால் மாற்றப்படுகிறது.
  • ஒரு புதிய பிரிவின் மூலம், துணை வேந்தர்களை நீக்குவதற்கான நடைமுறையை வகுப்பதோடு, அரசாங்கத்தின் உத்தரவின் மூலம் மட்டுமே துணை வேந்தர்களை நீக்க முடியும் என்று இந்த மசோதாக்கள் கூறுகின்றன.
  • மேலும், இதே வகையில் வரைவு செய்யப்பட்டுள்ள சென்னைப் பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா ஒன்றும் இதில் உள்ளது.
  • எனினும், ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சரை வேந்தராக நியமிக்க சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதாவில் கோரப் பட்டுள்ளது.
  • இந்த மசோதாக்கள், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
  • தற்போது, இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே முதல்வர் வேந்தராக உள்ளார்.
  • இது 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்