2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு
December 27 , 2023 333 days 384 0
தொழில்துறை மற்றும் சேவைத் துறையின் விரைவான வளர்ச்சியின் காரணமாக 1990-91 ஆம் ஆண்டில் 35% ஆக இருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மை துறையின் பங்கு கடந்த நிதியாண்டில் 15% ஆகக் குறைந்துள்ளது.
நாட்டின் ஒட்டு மொத்த மொத்த மதிப்பு கூட்டல் (GVA) மதிப்பீட்டில் 1990-91 ஆம் ஆண்டில் 35% ஆக இருந்த வேளாண்மை துறையின் பங்கு 2022-23 ஆம் ஆண்டில் 15% ஆகக் குறைந்துள்ளது.
இது வேளாண் சார் மொத்த மதிப்பு கூட்டல் மதிப்பின் சரிவினால் ஏற்படவில்லை, மாறாக தொழில்துறை மற்றும் சேவைத் துறையின் மொத்த மதிப்புக் கூட்டலின் விரைவான வளர்ச்சியால் இந்த சரிவு பதிவாகியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த துறைகள் சராசரியாக 4% வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்கும் பல தசாப்தங்களாக குறைந்துள்ளது என்பதோடு அது சமீபத்திய ஆண்டுகளில் சுமார் 4% ஆக உள்ளது.