TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு

December 27 , 2023 333 days 382 0
  • தொழில்துறை மற்றும் சேவைத் துறையின் விரைவான வளர்ச்சியின் காரணமாக 1990-91 ஆம் ஆண்டில் 35% ஆக இருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மை துறையின் பங்கு கடந்த நிதியாண்டில் 15% ஆகக் குறைந்துள்ளது.
  • நாட்டின் ஒட்டு மொத்த மொத்த மதிப்பு கூட்டல் (GVA) மதிப்பீட்டில் 1990-91 ஆம் ஆண்டில் 35% ஆக இருந்த வேளாண்மை துறையின் பங்கு 2022-23 ஆம் ஆண்டில் 15% ஆகக் குறைந்துள்ளது.
  • இது வேளாண் சார் மொத்த மதிப்பு கூட்டல் மதிப்பின் சரிவினால் ஏற்படவில்லை,  மாறாக தொழில்துறை மற்றும் சேவைத் துறையின் மொத்த மதிப்புக் கூட்டலின் விரைவான வளர்ச்சியால் இந்த சரிவு பதிவாகியுள்ளது.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த துறைகள் சராசரியாக 4% வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
  • உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்கும் பல தசாப்தங்களாக குறைந்துள்ளது என்பதோடு அது சமீபத்திய ஆண்டுகளில் சுமார் 4% ஆக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்