TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில வாரியத்தின் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

May 10 , 2023 438 days 330 0
  • இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வெழுதிய 8,03,385 மாணவர்களில் 7.5 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.
  • திண்டுக்கல்லைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளியின் மகள் எஸ்.நந்தினி 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்தின் +2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்து உள்ளார்.
  • 2023 ஆம் ஆண்டில்  மொத்தத் தேர்ச்சி சதவீதம்: 94.03 சதவீதம் ஆகும்.
  • மாணவிகளின் தேர்ச்சி சதவீதம்: 96.38 சதவீதம் ஆகும்.
  • மாணவர்களின் தேர்ச்சி சதவீதம்: 91.45 சதவீதம் ஆகும்.
  • 97.85 சதவீதத்துடன் விருதுநகர்  மாவட்டம் மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்துள்ளது.
  • இதில் விருதுநகர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக திருப்பூர் மாவட்டம் (97.79%) மற்றும் பெரம்பலூர் மாவட்டம் (97.59%) இடம் பெற்று உள்ளது.
  • தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2023 அறிக்கைகளின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 326 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
  • ஒன்றியப் பிரதேசமான புதுச்சேரியில் தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியம் நடத்தும் பள்ளிகள்  93.45 சதவீதம் தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
  • 2022 ஆம் ஆண்டில்  93.80% மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்