TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டு உலக வர்த்தக அறிக்கை: மறு உலகமயமாக்கல்

October 17 , 2023 404 days 247 0
  • உலக வர்த்தக அமைப்பினால் வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான உலக வர்த்தக அறிக்கையானது, மிகவும் பாதுகாப்பான, உள்ளார்ந்த மற்றும் நிலையான உலகினை உருவாக்குவதில் சர்வதேச வர்த்தகத்தின் பங்கினை குறித்து ஆராய்கிறது.
  • இந்த அறிக்கையானது "மறு-உலகமயமாக்கலுக்கு" பரிந்துரைப்பதோடு, பல்வேறு நாடுகள், மக்கள் மற்றும் சிக்கல்களுடனான வர்த்தக ஒருங்கிணைப்பையும் விரிவு படுத்துகிறது.
  • அணுமான அடிப்படையிலான புவிசார் அரசியல் கூட்டணிகளிலுள்ள வர்த்தகப் போட்டிகளானது அவற்றுக்கிடையே உள்ளதை விட மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.
  • இது வர்த்தக நடவடிக்கையினை போட்டி நாடுகளிலிருந்து நட்பு நாடுகளை (Friend-shoring) நோக்கி நகர்த்தப் படுவதைக் குறிக்கிறது.
  • மறு-உலகமயமாக்கல் என்பது உலகமயமாக்கலை மேலும் உள்ளார்ந்ததாகவும், பாதுகாப்பானதாகவும், நிலையானதாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்தும் நோக்கில் சர்வதேச வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பினை விரிவு படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் வழி வகுக்கும் கருத்தாக்கமாகும்.
  • இது நாடுகளுக்கு இடையேயான அதிக ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்பின் மூலம் புவிசார் அரசியல் குழப்பங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற சமகாலத்திய உலகளாவியச் சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்