TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டு சூடான் மோதல்

May 2 , 2023 446 days 236 0
  • சூடான் நாடானது அதன் இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளுக்கு இடையிலான வன்முறை மோதலில் மூழ்கியுள்ளது.
  • அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹானுக்கும் ஜெனரல் முகமது ஹம்தான் டகாலோவுக்கும் இடையிலான அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியானது மோதலுக்கு வழி வகுத்தது.
  • அப்தெல் சூடானின் இராணுவ ஆட்சியாளர் மற்றும் இராணுவத்தின் தலைவர் ஆவார்.
  • ஹெமெட்டி என்று பரவலாக அறியப்படும் டகாலோ, நாட்டின் துணை மற்றும் விரைவு நடவடிக்கை ஆதரவுப் படைகளின் (RSF) துணை இராணுவக் குழுவின் தலைவராக உள்ளார்.
  • 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் சூடானின் டார்பூர் மோதலின் போது, சூடானின் மோசமான ஜஞ்சவீத் படைகளின் தலைவராக இவர் இருந்தார்.
  • 1980 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் சூடான் நாட்டு அரசாங்கத்தினால் ஜான்ஜவீட் போராளிகள் முதன்முதலில் ஆயுதம் ஏந்தியப் படைகளாக ஒழுங்கமைக்கப் பட்டது.
  • உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட அண்டை நாடான சாட் பகுதியில் அரசு தனது செல்வாக்கை விரிவுபடுத்த உதவுவதே அக்குழுவின் முக்கிய நோக்கமாக இருந்தது.
  • சமீப காலம் வரை, 2019 ஆம் ஆண்டில் பதவி நீக்கம் செய்யப்பட்ட சூடான் அதிபர் ஒமர் அல்-பஷீரின் அதிகாரத்தினைக் கவிழ்ப்பதில் இரு குழுவும் இணைந்துப் பணியாற்றி வந்தன.
  • மேலும், 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற இராணுவப் புரட்சியில் இக்குழுவினர் முக்கியப் பங்கு வகித்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்