2023 ஆம் ஆண்டு செலவின மதிப்பாய்வு: ஓராண்டில் ஏற்பட்ட பருவநிலை தாக்க சேதங்கள் குறித்த அறிக்கை
January 9 , 2024 320 days 252 0
2023 ஆம் ஆண்டில் அதிக சேதத்தினை ஏற்படுத்திய பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய உலகின் முதல் 20 பேரழிவுகளில் 85 சதவிகிதம் (17) ஆனது வெள்ளம் மற்றும் புயல்களால் ஏற்பட்டவை ஆகும்.
இந்த அறிக்கையில் பகுப்பாய்வு செய்யப்பட்ட 20 பேரழிவுகள் ஆறு கண்டங்களில் (அண்டார்டிகாவைத் தவிர்த்து) உள்ள 14 நாடுகளில் நிகழ்ந்துள்ளன.
ஆய்வாளர்கள் பேரழிவுகளின் பொருளாதாரச் செலவினங்களைக் கணக்கிட்டனர்.
காட்டுத்தீ, வறட்சி (பருவநிலை சார்ந்த பேரழிவுகள்) முதல் வெள்ளம் மற்றும் புயல்கள் (நீரியல் மற்றும் வானிலை சார்ந்த பேரழிவுகள்) வரையிலான பேரழிவுகளால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அமெரிக்காவில் 74 சதவீத பொருளாதார இழப்புகள் (76.4 பில்லியன் டாலர் மதிப்பு) காப்பீடு செய்யப்பட்டிருந்தன.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்துடன் ஒப்பிடுகையில், இந்தப் பிராந்தியத்தில் வெறும் 13 சதவீத பொருளாதார இழப்புகள் (22.2 பில்லியன் டாலர்) மட்டுமே காப்பீடு செய்யப் பட்டிருந்தன.