2023 ஆம் ஆண்டு வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் திருத்தம்
January 7 , 2025 8 days 103 0
இந்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகமானது (DGFT) 2023 ஆம் ஆண்டு வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் திருத்தம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.
வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் உருவாக்கம் அல்லது திருத்தம் தொடர்பான கருத்துகள், பரிந்துரைகள், கருத்துரைப்புகள் அல்லது அதற்கான் பின்னூட்டங்களை ஏற்காததற்கான காரணங்களைத் தெரிவிக்கும் ஒரு முக்கிய நெறிமுறையையும் இந்த திருத்தங்கள் வழங்குகின்றன.
பங்குதாரர்களிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு மதிப்புமிக்க கருத்து/கருத்தும் உரிய முறையில் பரிசீலிக்கப்படுவதை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
இது கொள்கை மற்றும் நடைமுறைகளை அறிமுகப்படுத்தும் அல்லது மாற்றும் முன் முடிவெடுக்கும் செயல்பாட்டில் அனைத்துப் பங்குதாரர்களின் பங்கேற்பையும் நன்கு ஊக்குவிக்கிறது.