இந்தியாவானது இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 25 வரை 204 புலிகளை இழந்துள்ளது.
இந்திய மாநிலங்களில் 52 புலிகளின் இறப்புகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து இந்தியாவில் அதிக புலிகளைக் கொண்ட மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் 45 புலிகள் உயிரிழந்துள்ள நிலையில், 26 புலிகளின் இறப்புகளுடன் உத்தரகாண்ட் அடுத்த இடத்தில் உள்ளது.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தலா 15 புலிகளின் இறப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டு இறப்புகள் கடந்த பத்தாண்டுகளில் மிக அதிகமானதாக உள்ளதாக சில ஊடகங்களின் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் இந்தியப் புலிகளின் எண்ணிக்கையானது 200 அதிகரித்துள்ளது.
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையானது 2018 ஆம் ஆண்டில் 2,967 ஆகவும், 2022 ஆம் ஆண்டில் 3,167 ஆகவும் இருந்தது.