TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டு IMO பசுமை இல்ல வாயு உத்தி

July 14 , 2023 504 days 331 0
  • சர்வதேசக் கடல்சார் அமைப்பு (IMO) ஆனது, தீங்கு விளைவிக்கும் உமிழ்வைக் குறைப்பதற்காக, கப்பல்களில் இருந்து வெளியாகும் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்கான 2023 ஆம் ஆண்டு IMO உத்தியினை ஏற்றுக் கொள்வதற்கு ஒப்புக் கொண்டுள்ளது.
  • ஆண்டுதோறும் 1 பில்லியன் டன்கள் CO2 உமிழ்வு அல்லது உலகளாவியப் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளில் 3% ஆனது கப்பல் போக்குவரத்து துறையினால் வெளியிடப் படுகிறது.
  • திருத்தியமைக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டின் IMO பசுமை இல்ல வாயு உத்தியானது, 2030 ஆம் ஆண்டிற்குள் சுழிய அளவு உமிழ்திறனைக் கொண்ட மாற்று மூலம் மற்றும் கிட்டத்தட்ட சுழிய அளவு உமிழ்திறனைக் கொண்ட பசுமை இல்ல வாயுக்கள் சார்ந்த எரிபொருட்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது.
  • 2008 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2030 ஆம் ஆண்டிற்குள் சர்வதேசக் கப்பல் போக்குவரத்தில் இருந்து வெளியாகும் மொத்த வருடாந்திரப் பசுமை இல்ல வாயு உமிழ்வினைக் குறைந்தபட்சம் 20% அளவிற்குக் குறைக்க ஒரு அழைப்பினை இது விடுத்து உள்ளதுடன் 30% அளவில் குறைப்பதற்கான ஒரு நடவடிக்கையையும்  மேற் கொள்ள அது வலியுறுத்தியுள்ளது.
  • 2008 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2040 ஆம் ஆண்டிற்குள் சர்வதேசக் கப்பல் போக்குவரத்திலிருந்து வெளியாகும் மொத்த வருடாந்திரப் பசுமை இல்ல வாயு உமிழ்வினைக் குறைந்தபட்சம் 70% குறைப்பதற்கான அழைப்பினை இது விடுத்து உள்ளதுடன், 80% அளவில் அதனைக் குறைப்பதற்கான ஒரு நடவடிக்கையையும் மேற் கொள்ள இது வலியுறுத்தியுள்ளது.
  • 2030 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட உள்ள ஆற்றலில் கிட்டத்தட்ட சுழிய அளவு உமிழ் திறனைக் கொண்ட தொழில்நுட்பங்கள், எரிபொருள்கள் மற்றும் எரிசக்தி மூலங்கள் ஆனது “குறைந்தது 5% ஆக இருக்க வேண்டும் என்ற இலக்குடன், அதனை 10% ஆக உயர்த்துவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” எனவும் இது வலியுறுத்தியுள்ளது.
  • சர்வதேசக் கடல்சார் அமைப்பு ஆனது 1948 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிறுவனமாக ஜெனீவா நகரில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்