TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டு REACH மாற்றத்தினை ஏற்படுத்தும் புதுமையாளர் விருது

December 16 , 2023 198 days 174 0
  • ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் அதுல் ஷா அவர்களுக்கு, தொழு நோய் சிகிச்சைக்கான அவரது அற்புதமான பங்களிப்பிற்காக 2023 ஆம் ஆண்டு REACH மாற்றத்தினை ஏற்படுத்தும் புதுமையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  • இவர் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குறைபாடுகளை தீர்ப்பதற்காக சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தாமல் மிகவும் எளிய அறுவை சிகிச்சையைப் பயன்படுத்தினார்.
  • தொழுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பொதுவாக ஏற்படும் பாத புண்களைப் பராமரிப்பதில் நோயாளிகளுக்கு உதவும் வகையில் ‘சுய-பராமரிப்புத் தொகுப்பு’ ஒன்றையும் அவர் வடிவமைத்தார்.
  • இந்தப் புதுமையான தீர்வு இந்தியாவின் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தில் (2007 ஆம் ஆண்டு முதல்) ஒருங்கிணைக்கப்பட்டு இந்தியா முழுவதும் சுமார் 80,000 பேர் பயனடைந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்