TNPSC Thervupettagam

2023 ஆம் நிதியாண்டில் கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதலிடம்

May 30 , 2023 418 days 218 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின் படி, தமிழ்நாட்டின் மொத்த சந்தைக் கடன்கள் 2021-22 ஆம் ஆண்டில் இருந்த அதே அளவில் உள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில்  அதிகக் கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • இம் மாநிலத்தின் வரி வருவாய் 2021-22 ஆம் ஆண்டில்  ரூ.1,60,324.66 கோடியிலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 18 சதவீதம் அதிகரித்து ரூ.1,88,953.57 கோடியாக உயர்ந்துள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் இம் மாநிலத்தின் மொத்த வருவாய் வரவினங்கள் 2,42,013.85 கோடி ரூபாயாக இருந்தது.
  • 2022-23 ஆம் ஆண்டில் அதன் மொத்த வரவினங்கள் 2,43,133.76 கோடி ரூபாயாக இருந்தது.
  • 2022-23 ஆம் ஆண்டில்   மொத்தச் செலவினங்கள் 3,15,552.75 கோடி ரூபாயாக இருந்தது.
  • 2022-23 ஆம் ஆண்டில் வருவாய் செலவினங்கள் 2,69,562.94 கோடி ரூபாயாக இருந்தது.
  • பற்றாக்குறையின் தரம் என்பது (வருவாய்ப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக் குறை ஆகியவற்றுக்கு இடையேயுள்ள ஒரு விகிதம்) குறிப்பிடத்தக்க அளவில் பெரு முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் 38.02% ஆக இருந்த இந்த விகிதமானது, 2017ஆம் நிதியாண்டில்  22.52% ஆக இருந்த அளவுடன் ஒப்பிடப் படும் போது ஆறு ஆண்டுகளில் மிக அதிக அளவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்