TNPSC Thervupettagam

2023 நிதியாண்டில் அமைப்புசார் வேலைவாய்ப்பு உருவாக்கம்

June 10 , 2023 406 days 239 0
  • ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிப் பதிவின்படி இந்தியாவில் 2023 நிதியாண்டில் 1.39 கோடி பேர் புதிய அமைப்புசார் வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
  • இது 2022 ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 13 சதவீதம் அதிகமாகும்.
  • இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிப்பதற்கான மையத்தின் தரவுகள் 2023 நிதி ஆண்டில் வேலையின்மை விகிதம் 7.6 சதவீதமாக உள்ளது என்ற குறைந்த அளவுத் தகவலையே வெளியிட்டுள்ளது.
  • 2022 ஆம் நிதியாண்டில் 8 சதவிகிதம் மற்றும் 2021 நிதியாண்டில் 10 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம் முந்தைய இரண்டு நிதியாண்டுகளுடன் ஒப்பிடச் செய்கையில் 2023 ஆம் ஆண்டில் குறைந்துள்ளது.
  • இந்த நிதியாண்டில் மகாராஷ்டிரா மாநிலம் 30.28 லட்சம் பேருக்கு அமைப்புசார் வேலைவாய்ப்பினை உருவாக்கி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • 2023 நிதியாண்டில் சுமார் 14.05 லட்சம் பேருக்கு நிகர புதிய அமைப்புசார் வேலை வாய்ப்பினை உருவாக்கி தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • கர்நாடகா, ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் முறையே மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை இதில் பிடித்துள்ளன.
  • பெரிய மாநிலங்களில் அஸ்ஸாம் 64,432 என்ற எண்ணிக்கையில் மிகக் குறைவான அளவு அமைப்புசார் வேலைவாய்ப்பினை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்