TNPSC Thervupettagam

2023-2033 ஆம் ஆண்டு அமலாக்கத் திட்டம்

May 31 , 2023 548 days 351 0
  • உலக வானிலையியல் அமைப்பானது (WMO) உலகச் சுகாதார அமைப்புடன் இணைந்து பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை மேலாண்மை செய்வதற்கான சேவைகள் மற்றும் பருவநிலை, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அறிவியல் ஆகியவற்றினை மேம்படுத்தச் செய்வதற்கான 2023-2033 ஆம் ஆண்டு அமலாக்கத் திட்டத்தையும் வடிவமைத்துள்ளது.
  • இந்தத் திட்டமானது "தற்போதுள்ள மற்றும் அதிகரித்து வரும் தீவிர வானிலை நிகழ்வுகள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களை எதிர்கொள்ளும் மக்களுக்குச் சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வினை வழங்குதல்" என்ற ஒரு இலக்கினை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது பருவநிலை, வானிலை, காற்று மாசுபாடு, புற ஊதாக் கதிர்வீச்சு, தீவிர மோசமான நிகழ்வுகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகளின் ஆரோக்கியத்தின் மீதான ஒரு தாக்கத்தை மேலாண்மை செய்வதற்காக என்று ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க முயல்கிறது.
  • 2022 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் கடுமையான வெப்பத்தினால் குறைந்தது 15,000 பேர் உயிரிழந்தனர்.
  • 2030 முதல் 2050 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில், பருவநிலை மாற்றமானது ஆண்டிற்குச் சுமார் 250,000 அளவில் கூடுதல் இறப்புகளை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
  • இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் சுமார் 8.4 பில்லியன் மக்கள், நோய்க் கடத்திகளால் ஏற்படுகின்ற மலேரியா மற்றும் டெங்கு ஆகிய இரண்டு பெரிய நோய்களால் பாதிக்கப் படக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்