TNPSC Thervupettagam

2023-24 ஆம் ஆண்டிற்கான முதல் துணை நிதி ஒதுக்கீடுகள்

October 13 , 2023 410 days 276 0
  • நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், 2023-24 ஆம் ஆண்டிற்கான 2,893.15 கோடி மதிப்பிலான தமிழக அரசின் முதல் துணை நிதி ஒதுக்கீடுகளைச் சமர்ப்பித்தார்.
  • இதில் சென்னை மாநகராட்சிக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 304 கோடி ரூபாயை அரசு வழங்கியுள்ளது.
  • இது சென்னை மற்றும் அதன் புறநகரப் பகுதிகளிலும் கடலூர் மாநகராட்சியிலும் மழைநீர் வடிகால் அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும்.
  • தமிழ்நாடு கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் திருச்சி பால் ஒன்றியம் ஆகியவற்றிற்கான மூலதனப் பங்கீட்டு உதவியாக 175.33 கோடி ரூபாயை அனுமதித்துள்ளது.
  • இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 1,87,275 விவசாயிகளுக்கு உள்ளீட்டு கருவிகளுக்கான மானிய நிவாரண உதவி வழங்க 181.40 கோடி ரூபாய் வழங்கப் பட்டு உள்ளது.
  • தென்காசி, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் 25 தொகுதிகள் இதில் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்