2023-24 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையின் மதிப்பீட்டின்படி, மத்திய வரிகளில் தன் பங்காக தமிழக மாநிலமானது 44,760.83 கோடி ரூபாயை பெற உள்ளது.
இது ஆரம்ப மதிப்பீடுகளில் கணிக்கப்பட்ட 41,664.86 கோடி ரூபாயை விட சுமார் 7.4% அதிகமாகும்.
2024-25 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளில், மத்திய வரிகளில் தமிழகத்திற்கான பங்கு 49,754.95 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது 2023-24 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட சுமார் 11.2% அதிகம் ஆகும்.
மத்திய நிதிநிலை அறிக்கை ஆவணங்களின்படி, 2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய வரிகளின் உண்மையான பகிர்வு 38,685.47 கோடி ரூபாயாக இருந்தது.