2023-24 ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகள்
October 12 , 2023 411 days 376 0
2023-24 ஆம் நிதியாண்டில் (ஆகஸ்ட் மாதம் வரை) தமிழகத்தின் மொத்த வருவாய் வரவுகள் சிறிதளவு அதிகரித்து 92,967.33 கோடி ரூபாயாக உள்ளது.
2022-23 ஆம் நிதியாண்டின் இதே காலக் கட்டத்தில் இது 91,812.08 கோடி ரூபாயாக இருந்தது.
2023-24 ஆம் நிதியாண்டிற்கான மாநில நிதிநிலை அறிக்கையில், மொத்த வருவாய் வரவுகள் 2,70,515.23 கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி, தமிழகம் தனது இலக்கில் 34.37 சதவீதத்தினை எட்டியுள்ளது.
2022-23 ஆம் நிதியாண்டின் இதே காலத்தில் 56,521.83 கோடி ரூபாயாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR) ஆனது 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 5.47% அதிகரித்து 59,616.01 கோடி ரூபாயாக உள்ளது.
2023-24 ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR) ஆனது 1,81,182.22 கோடி ரூபாயாக இருக்கும் என்று நிதிநிலை அறிக்கையில் கணிக்கப்பட்டிருந்தது.
2023-24 ஆம் நிதியாண்டில் (ஆகஸ்ட் மாதம் வரை) மாநிலத்தின் வருவாய்ச் செலவினம் 1,1,0,582.31 கோடி ரூபாயாக இருந்தது.
மாநில நிதிநிலை அறிக்கையில் 2023-24 ஆம் நிதியாண்டில் வருவாய்ச் செலவினம் 3,08,055.68 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப் பட்டது.
2023-24 ஆம் நிதியாண்டின் ஆகஸ்ட் மாதம் வரை வருவாய்ப் பற்றாக்குறை 17,614.98 கோடி ரூபாயாக இருந்தது.
மாநில நிதிநிலை அறிக்கையில் வருவாய்ப் பற்றாக்குறை 37,540.45 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப் பட்டது.