TNPSC Thervupettagam

2023-24 ஆம் ஆண்டின் வெளிநாட்டினர் நாடு கடத்தல்

January 2 , 2025 57 days 119 0
  • 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை மொத்தம் 2,331 வெளிநாட்டவர்கள், வெளிநாட்டினர் பிராந்தியப் பதிவு அதிகாரிகளால் (FRROs) நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
  • இவர்களில் சுமார் 1,470 பேர் நைஜீரியாவையும், 411 பேர் வங்காளதேசத்தையும், 78 பேர் உகாண்டாவையும் சேர்ந்தவர்கள்.
  • அதே காலக் கட்டத்தில், பாகிஸ்தானில் இருந்து சிறுபான்மைச் சமூகத்தினருக்கு 1,112 நீண்ட கால நுழைவு இசைவுச் சீட்டுகளை (LTV) உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
  • LTV ஆனது, சுமார் ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான குடியுரிமைக்கான முன்னோடிகளாகும்.
  • மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் மொத்தம் 1,699 குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப் பட்டுள்ளன.
  • இந்தக் காலகட்டத்தில் சுமார் 98 லட்சம் வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வருகை தந்து உள்ளனர், அதில் அதிக எண்ணிக்கையிலானப் பார்வையாளர்கள் வங்காள தேசத்தில் இருந்து (21,08,734) வருகை தந்துள்ளனர்.
  • அதைத் தொடர்ந்து அமெரிக்கா (17,37,549), ஐக்கியப் பேரரசு (9,86,954), ஆஸ்திரேலியா (4,72,913), கனடா (4,00,417), இலங்கை (2,85,664), மலேசியா (2,80,578) ), ஜெர்மனி (2,39,271), நேபாளம் (2,02,197) மற்றும் சிங்கப்பூர் (2,00,708) ஆகியவை உள்ளன.
  • மொத்த வெளிநாட்டினரின் வருகையில் 10 நாடுகள் 70.27% பங்கினைக் கொண்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்