TNPSC Thervupettagam

2023-24 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முதல் முன்கூட்டிய மதிப்பீடுகள்

January 12 , 2024 190 days 248 0
  • முதல் முன்கூட்டிய மதிப்பீடுகள் (FAEs) ஆனது அரசாங்கத்தால் சமீபத்தில் வெளியிடப் பட்டுள்ளது.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, 2022-23 ஆம் ஆண்டில் பதிவான 7.2% வளர்ச்சியை விட சற்று வேகமான விதத்தில் நடப்பு நிதியாண்டில் (2023-24) 7.3% ஆக வளரும்.
  • 2022-23 ஆம் ஆண்டில் 7% ஆக இருந்த பொருளாதாரத்தின் மொத்த மதிப்பு கூட்டல் (GVA) வளர்ச்சியானது இந்த ஆண்டு 6.9% ஆக சற்று குறையும்.
  • நிதிநிலை அறிக்கையின் 10.5% என்ற மதிப்பீட்டுடன் ஒப்பிடும் போது பெயரளவு GDP வளர்ச்சி 8.9% ஆக இருக்கும்.
  • இது ஆண்டின் 5.9% என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இலக்கினை மீறி 6% என்ற அளவு நிதிப்பற்றாக்குறை நிலையை எட்டக் கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
  • ஒரு வருடத்திற்கு முன்பு 4% ஆக இருந்த வேளாண் துறைக்கான மொத்த மதிப்புக் கூட்டல் வளர்ச்சியானது இந்த ஆண்டு 1.8% ஆக பாதியாகக் குறையும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தின் இறுதியில் முன்கூட்டிய மதிப்பீடுகள் வழங்கப்படுகிறது.
  • அவை அந்தந்த நிதியாண்டிற்கான வளர்ச்சியின் முதல்கட்ட மதிப்பீடுகள் மட்டுமே ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்