2023-24 ஆம் ஆண்டில் தனது மாநிலத்தில் செயல்படும் திட்டங்களுக்கு வங்கி நிதியை ஈர்ப்பதில் குஜராத் உத்தரப் பிரதேசத்தைப் பின்னுக்கு தள்ளியது.
குஜராத் மாநிலம் அதன் 154 திட்டங்களுக்கு பெற்ற நிதியானது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் நிதியளிக்கப் பட்ட ரூ. 3.9 லட்சம் கோடியில் 14.7 சதவீதம் ஆகும்
இது முந்தைய ஆண்டின் 14% பங்கை விட அதிகரித்துள்ளது.
உத்தரப் பிரதேசமானது 69 திட்டங்களுக்கு நிதியைப் பெற்றுள்ளது, மேலும் அதன் பங்கு முந்தைய ஆண்டில் இருந்த 16.2% இல் இருந்து 7.6% ஆகக் குறைந்துள்ளது.
மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியன முதலிடத்தில் உள்ள மற்ற சிறந்த முதலீட்டிற்கான மாநிலங்களாக உள்ளன.