TNPSC Thervupettagam

2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை

May 31 , 2024 48 days 143 0
  • 2023-24 ஆம் ஆண்டில் சீனா, ரஷ்யா, சிங்கப்பூர் மற்றும் கொரியா உள்ளிட்ட அதன் முதல் பத்து வர்த்தகப் பங்குதார நாடுகளுள் ஒன்பது நாடுகளுடன் இந்தியா வர்த்தகப் பற்றாக்குறையைக் கொண்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • சீனா, ரஷ்யா, கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகளுடனான வர்த்தகப் பற்றாக்குறை முந்தைய நிதியாண்டை விட அதிகரித்துள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ரஷ்யா, இந்தோனேசியா மற்றும் ஈராக் ஆகியவற்றுடனான வர்த்தகப் பற்றாக்குறை குறைந்துள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டில் சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை 85 பில்லியன் டாலராகவும், ரஷ்யாவுடன் 57.2 பில்லியன் டாலராகவும், கொரியாவுடன் 14.71 பில்லியன் டாலராகவும், ஹாங்காங் நாட்டுடன் 12.2 பில்லியன் டாலராகவும் உயர்ந்து உள்ளது.
  • இது 2022-23 ஆம் ஆண்டில் முறையே 83.2 பில்லியன் டாலராகவும், 43 பில்லியன் டாலராகவும், 14.57 பில்லியன் டாலராகவும், 8.38 பில்லியன் டாலராகவும் இருந்தது.
  • 2023-24 ஆம் ஆண்டில் 118.4 பில்லியன் டாலர் மதிப்பிலான இருவழி வர்த்தகத்துடன் அமெரிக்காவை விஞ்சி இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதார நாடாக சீனா உருவெடுத்துள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 118.28 பில்லியன் டாலராக இருந்தது.
  • வாஷிங்டன், 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளில் புது டெல்லியின் சிறந்த வர்த்தகப் பங்குதரராக இருந்தது.
  • சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், கொரியா மற்றும் இந்தோனேஷியா (ஆசியான் நாடுகளின் ஒரு பகுதியாக) ஆகிய நான்கு முக்கிய வர்த்தகப் பங்குதாரர்களுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளது.
  • இந்தியா 2023-24 ஆம் ஆண்டில் அமெரிக்காவுடன் 36.74 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக உபரியினைக் கொண்டிருந்தது.
  • இது ஐக்கியப் பேரரசு, பெல்ஜியம், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளுடனும் வரத்தக உபரியைக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்