TNPSC Thervupettagam

2023-24 ஆம் நிதியாண்டில் வேலை வாய்ப்பு உருவாக்கம்

July 12 , 2024 134 days 226 0
  • 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியா தற்காலிகமாக 46.7 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதையடுத்து, நாட்டின் மொத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை 643.3 மில்லியனாக உயர்ந்துள்ளது.
  • அதே நிதியாண்டில் நாட்டின் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் 6 சதவீதமாக இருந்தது.
  • இது முந்தைய நிதியாண்டில் 3.2 சதவீதமாக இருந்தது.
  • ஆனால் 2022-23 ஆம் நிதியாண்டின் நிலவரப்படி இந்தியாவின் ஒட்டுமொத்தப் பணியாளர்களில் வெறும் 20.9 சதவீதம் பேர் மட்டுமே வழக்கமான ஊதியத்தைச் சம்பளமாக பெற்றுள்ளனர்.
  • 7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மட்டுமே, இந்தியாவில் 8 மில்லியனில் முதல் 9 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
  • 2017-18 முதல் 2021-22 ஆம் நிதியாண்டு வரை ஆண்டிற்கு என்று சராசரியாக சுமார் 20 மில்லியனுக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்