TNPSC Thervupettagam
June 3 , 2023 543 days 334 0
  • சமீபத்தில் பூமியை ஒட்டி அமைந்த ஒரு புதிய குறுங்கோள் ஒன்றினைச் சமீபத்தில் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • 2023 FW13 எனப் பெயரிடப்பட்ட இந்தக் குறுங்கோள் ஆனது "நிலவு போன்ற" அல்லது "துணைக் கோள் போன்ற" ஒரு வான் பொருளாகக் கருதப்படுகிறது.
  • இந்தப் புதிய வானியல் சார்ந்த அமைப்பானது பூமியைப் போலவே சூரியனைச் சுற்றி வருகிறது.
  • நிலவு போன்ற இந்த வான்பொருளானது 50 அடி (15 மீட்டர்) அளவு கொண்டதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
  • சூரியனைச் சுற்றி வரும் போது, இந்த நிலவு போன்ற வான் பொருளும் பூமியைச் சுற்றி வருகிறது.
  • இது பூமியிலிருந்து சுமார் ஒன்பது மில்லியன் மைல்கள் (14 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் சுற்றி வருகிறது.
  • இது பூமியின் நிலவு போன்று அமைந்த ஒரே துணை வான் பொருளல்ல.
  • 2016 ஆம் ஆண்டில் காமோ'ஒயலேவா எனப்படும் மற்றொரு துணைக்கோள் போன்ற வான் பொருள் கண்டுபிடிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்