TNPSC Thervupettagam

2023 IAAF உலக சாம்பியன்ஷிப்

December 8 , 2018 2178 days 696 0
  • 2023 ஆம் ஆண்டின் சர்வதேச தடகள விளையாட்டுக் கூட்டமைப்புச் சங்கத்தின் (IAAF - International Association of Athletics Federations) உலக சாம்பியன்ஷிப் போட்டியை ஹங்கேரியின் தலைநகரான புத்தபெஸ்ட் நகரமானது நடத்துவது என்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
  • மொனாக்கோவில் நடைபெற்ற IAAF ஆணையக் கூட்டத்தின் போது இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.
  • ஆறு ஆண்டுகால இடைவெளிக்குப் பின்பு உலக சாம்பியன்ஷிப் போட்டியானது ஐரோப்பாவால் நடத்தப்படுகிறது. உலக சாம்பியன்ஷிப் போட்டியானது 2019 ஆம் ஆண்டில் கத்தாரிலும் 2021 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலும் நடைபெறவிருக்கின்றன.
  • 2017 ஆம் ஆண்டின் IAAF உலக சாம்பியன்ஷிப் போட்டியானது இங்கிலாந்தின் இலண்டன் நகரில் நடைபெற்றது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுகளின் ஐரோப்பியத் தலைநகரம் (European Capital of Sport for 2019) என்ற பட்டம் புத்தபெஸ்டிற்கு வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்