2023 ஆம் ஆண்டின் சர்வதேச தடகள விளையாட்டுக் கூட்டமைப்புச் சங்கத்தின் (IAAF - International Association of Athletics Federations) உலக சாம்பியன்ஷிப் போட்டியை ஹங்கேரியின் தலைநகரான புத்தபெஸ்ட் நகரமானது நடத்துவது என்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
மொனாக்கோவில் நடைபெற்ற IAAF ஆணையக் கூட்டத்தின் போது இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.
ஆறு ஆண்டுகால இடைவெளிக்குப் பின்பு உலக சாம்பியன்ஷிப் போட்டியானது ஐரோப்பாவால் நடத்தப்படுகிறது. உலக சாம்பியன்ஷிப் போட்டியானது 2019 ஆம் ஆண்டில் கத்தாரிலும் 2021 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலும் நடைபெறவிருக்கின்றன.
2017 ஆம் ஆண்டின் IAAF உலக சாம்பியன்ஷிப் போட்டியானது இங்கிலாந்தின் இலண்டன் நகரில் நடைபெற்றது.
2019 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுகளின் ஐரோப்பியத் தலைநகரம் (European Capital of Sport for 2019) என்ற பட்டம் புத்தபெஸ்டிற்கு வழங்கப்படுகிறது.