TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டின் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள்

December 8 , 2023 225 days 179 0
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், HCL பெருநிறுவனத்தின் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, இந்திய உருக்கு ஆணையத்தின் தலைவர் சோமா மோண்டல் மற்றும் பயோகான் நிர்வாகத் தலைவர் கிரண் மசூம்தார்-ஷா ஆகியோர் ஃபோர்ப்ஸின் வருடாந்திர ‘உலகின் சக்திவாய்ந்தப் பெண்கள்பட்டியலில் இடம் பெற்ற 100 பேரில் நான்கு பேர் இந்தியர்களாவர்.
  • இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சராகப் பணியாற்றிய நிர்மலா சீதாராமன், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
  • இந்தப் பட்டியலில் முதல் இடத்தினை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான உர்சுலா வான் டெர் லேயன் பிடித்துள்ளார்.
  • அவரைத் தொடர்ந்து ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராக பணி புரியும் கிறிஸ்டின் லகார்ட்,  அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் மற்றும் இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்