TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்குப் புகைப்படக் கலைஞர்

November 5 , 2023 239 days 348 0
  • இந்தியாவைச் சேர்ந்த 6 புகைப்படக் கலைஞர்கள் வனவிலங்குப் புகைப்பட விருதுகளை வென்றுள்ளனர்.
  • ஸ்ரீராம் முரளி, தமிழ்நாட்டின் ஆனைமலை புலிகள் வளங்காப்பகப் பகுதியில் எடுத்த புகைப்படத்திற்காக ‘நடத்தை: முதுகெலும்பில்லா உயிரினங்கள்’ பிரிவில் ஆண்டின் சிறந்த வனவிலங்குப் புகைப்படக் கலைஞர் விருதைப் பெற்றுள்ளார்.
  • விஷ்ணு கோபால் விலங்கு உருவப்படம் என்ற பிரிவில் விருதினை வென்றார்.
  • அசாமின் ஒராங் தேசிய பூங்காவின் விளிம்புப் பகுதிகளில் வாழும் மக்கள் மத்தியில் உலாவும் ஒரு துன்பப்பட்ட நிலையில் உள்ள புலியின் புகைப்படத்தினை எடுத்த நெஜிப் அகமது மற்ற வெற்றியாளர்கள் ஆவர்..
  • எரியும் குப்பைகளின் தீப்பிழம்புகளால் சூழப்பட்ட ராம்சர் தளமான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் புகைப்படத்திற்காக ராஜ் மோகன் பரிசு பெற்றார்.
  • பெங்களூரைச் சேர்ந்த 10 வயதான விஹான் தல்யா விகாஸ் தனது பிரிவில் முதல் பரிசை வென்றார்.
  • இந்தப் பரிசானது பெரும்பாலும் 'புகைப்படக் கலையின் ஆஸ்கார்' என்று குறிப்பிடப் படுகிறது.
  • இது உலகின் மிகவும் சிறப்பான வனவிலங்குப் புகைப்படங்களைக் காட்சிப் படுத்தச் செய்வதற்கான உலகளாவிய தளமாக செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்