TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டிற்கான ATMS தரநிலைகள் மற்றும் விவரக்குறிப்புகள்

October 25 , 2023 270 days 179 0
  • இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது மேம்படுத்தப்பட்ட மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட மேம்படுத்தப் பட்டப் போக்குவரத்து மேலாண்மை அமைப்பின் (ATMS) 2023 ஆம் ஆண்டிற்கான தரநிலைகள் மற்றும் விவரக்குறிப்புகளைச் செயல்படுத்த அதன் புதுப்பிக்கப்பட்ட கொள்கைகளை வெளியிட்டுள்ளது.
  • இந்த முயற்சியானது தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவு வழித்தடங்களில் சாலைப் பாதுகாப்பையும் எண்ம அமலாக்கத்தையும் மேம்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சமீபத்திய முறைகளைப் பயன்படுத்துகிறது.
  • போக்குவரத்து விதிகளின் எண்ம அமலாக்கத்தை கொண்டு வருவதற்காக, தற்போது உள்ள போக்குவரத்து விதிகள் தொடர்பான VIDS ஒளிபடக்கருவிகளானது காணொளி நிகழ்வு கண்டறிதல் மற்றும் அமலாக்க அமைப்பு (VIDES) ஆகியவை மூலம் மாற்றப் படும்.
  • வாகனத்தின் வேகத்தினைக் கண்டறியும் அமைப்பானது (VSDS) இப்போது காணொளிகளின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதோடு, இது தானியங்கி இலக்கத் தகடு அங்கீகாரத்தின் மூலம்  ஒளிபடக்கருவிகளின் பயன்பாட்டினை மேம்படுத்தச் செய்கிறது.
  • கண்டறியப்பட்ட நிகழ்வுகளைப் பொறுத்து, அந்தப் பாதைகளில் ரோந்து செல்லும் வாகனங்கள் அல்லது உதவு வகை வாகனங்கள் ஆகியவற்றை காணொளிகளின் மூலம் எச்சரித்தல், மின் செலுத்துச் சீட்டுகளை உருவாக்குதல், அருகிலுள்ள செய்தி பலகைகளுக்கு நிலைகளை உணர்த்தி எச்சரிக்கைகளை வழங்குதல் அல்லது அருகிலுள்ளப் பயணிகளுக்கு 'ராஜ்மார்க்யாத்ரா' கைபேசி செயலி மூலம் அறிவிப்புகளை அனுப்புதல் போன்ற தகவல்களை இது வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்