2023 ஆம் ஆண்டிற்கான இறங்குமுகக் கணிப்பு : உலகளாவிய மாறுபக்க கொழுப்புப் பொருள் ஒழிப்பு – 2020 மீதான உலக சுகாதார நிறுவன அறிக்கை
September 15 , 2020 1532 days 1231 0
58 நாடுகள் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருளிலிருந்து 3.2 பில்லியன் மக்களைப் பாதுகாப்பதற்கானச் சட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.
ஆனால் இன்னும் 100ற்கும் மேற்பட்ட நாடுகள் தங்களது உணவு விநியோகத்திலிருந்து இந்தத் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
15 நாடுகள் மாறுபக்க கொழுப்பை உட்கொள்வதின் காரணமாக உலகளாவிய இறப்பில் மூன்றில் இரண்டு மடங்கிற்குக் காரணமாக உள்ளன.
இந்த 15 நாடுகளில், கனடா, லாட்வியா, ஸ்லோவேனியா மற்றும் அமெரிக்கா ஆகியவை 2017 ஆண்டு முதல் WHO (World Health Organisation) பரிந்துரைத்த சிறந்த நடைமுறைக் கொள்கைகளைச் செயல்படுத்தியுள்ளன.
மீதமுள்ள 11 நாடுகளான அசர்பைஜான், வங்க தேசம், பூடான், ஈகுவேடர், எகிப்து, இந்தியா, ஈரான், மெக்சிகோ, நேபாளம், பாகிஸ்தான், கொரியக் குடியரசு ஆகியவை விரைவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவின் நடவடிக்கை
2011 ஆம் ஆண்டில் இந்தியாவானது எண்ணெய் மற்றும் கொழுப்பில் 10% என்ற அளவிற்கு TFA (Trans fatty acids) வரம்பை நிர்ணயித்தது. மேலும் இது 2015 ஆண்டில் 5% ஆகக் குறைக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (FSSAI - Food Safety and Standards Authority of India) இந்த வரம்பை 2% ஆகக் குறைத்தது. மேலும் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் மாறுபக்க கொழுப்பை உலகளாவிய இலக்கிற்கு 1 ஆண்டிற்கு முன்னதாகவே, அதாவது 2022 ஆம் ஆண்டில் உணவுச் சங்கிலியிலிருந்து ஒழிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், FSSAI ஆனது உலகளாவிய சிறந்த நடைமுறையுடன் இந்தியாவில் ஒழுங்குமுறை ஒன்றிப் பொருந்தும் வகையில் பரிந்துரைத்துள்ளது. இது 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் அனைத்து உணவுப் பொருட்களுக்கும் 2% TFA என்ற வரம்பு பொருந்தும் வகையில் பொதுக் கருத்து வரைவு ஒழுங்குமுறையை வெளியிட்டுள்ளது.