TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டிற்கான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவன (SIPRI) அறிக்கை

December 9 , 2023 223 days 178 0
  • உலகின் மிகப்பெரிய 100 ஆயுத நிறுவனங்களின் ஆயுதங்கள் மற்றும் இராணுவ சேவைகளின் விற்பனையானது 2022 ஆம் ஆண்டில் $597 பில்லியனை எட்டியது.
  • இது நடைமுறை விதிகளின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டினை விட 3.5 சதவீதம் குறைவாக இருந்தது.
  • 2015 ஆம் ஆண்டு முதல் 100 ஆயுத நிறுவனங்களின் SIPRI பட்டியல் நிறுவப்பட்ட பிறகு இது அதன் முதல் சரிவிற்கான பதிவாக உள்ளது.
  • இந்தியப் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மசாகன் டாக்ஸ் ஆகியவை முதல் 100 ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளன.
  • இந்த பட்டியலில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆதிக்கம் செலுத்துகிறது, ஆனால் அதன் வருவாய் 7.9% குறைந்துள்ளது.
  • முதல் 100 நிறுவனங்களின் மொத்த ஆயுதங்களின் வருவாயில் 51% USA  வினை சேர்ந்ததாகும்.
  • முந்தைய SIPRI புள்ளி விபரங்களின்படி, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ($877 பில்லியன்), சீனா ($292 பில்லியன்) மற்றும் ரஷ்யா ($86.4 பில்லியன்) ஆகிய நாடுகளுக்குப் பிறகு,  ($81.4 பில்லியன்)  இராணுவத்திற்காக  செலவு செய்யும் உலகின் நான்காவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
  • 2018-2022 ஆம் ஆண்டில் மொத்த உலகளாவிய இறக்குமதியில் 11% பங்கினைக் கொண்டு, உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா தொடர்ந்து நீடித்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்