2023 ஆம் ஆண்டிற்கான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவன (SIPRI) அறிக்கை
December 9 , 2023 351 days 232 0
உலகின் மிகப்பெரிய 100 ஆயுத நிறுவனங்களின் ஆயுதங்கள் மற்றும் இராணுவ சேவைகளின் விற்பனையானது 2022 ஆம் ஆண்டில் $597 பில்லியனை எட்டியது.
இது நடைமுறை விதிகளின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டினை விட 3.5 சதவீதம் குறைவாக இருந்தது.
2015 ஆம் ஆண்டு முதல் 100 ஆயுத நிறுவனங்களின் SIPRI பட்டியல் நிறுவப்பட்ட பிறகு இது அதன் முதல் சரிவிற்கான பதிவாக உள்ளது.
இந்தியப் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மசாகன் டாக்ஸ் ஆகியவை முதல் 100 ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆதிக்கம் செலுத்துகிறது, ஆனால் அதன் வருவாய் 7.9% குறைந்துள்ளது.
முதல் 100 நிறுவனங்களின் மொத்த ஆயுதங்களின் வருவாயில் 51% USA வினை சேர்ந்ததாகும்.
முந்தைய SIPRI புள்ளி விபரங்களின்படி, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ($877 பில்லியன்), சீனா ($292 பில்லியன்) மற்றும் ரஷ்யா ($86.4 பில்லியன்) ஆகிய நாடுகளுக்குப் பிறகு, ($81.4 பில்லியன்) இராணுவத்திற்காக செலவு செய்யும் உலகின் நான்காவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
2018-2022 ஆம் ஆண்டில் மொத்த உலகளாவிய இறக்குமதியில் 11% பங்கினைக் கொண்டு, உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா தொடர்ந்து நீடித்து வருகிறது.