TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டில் CAG தணிக்கைகள்

December 27 , 2023 338 days 372 0
  • 2023 ஆம் ஆண்டில், தலைமைக் கணக்கு தணிக்கையாளரால் தயாரிக்கப்பட்ட மத்திய அரசின் கணக்குகள் குறித்த 18 கணக்கு தணிக்கை அறிக்கைகள் மட்டுமே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
  • 2019 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சராசரியாக 22 என்ற கணக்கில், கடந்த சில ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
  • இது 2014 மற்றும் 2018 முதல் 2023 வரையிலான ஆண்டுகளுக்கு இடையில் 40 ஆக குறைந்தது.
  • கடந்த ஐந்தாண்டுகளில் இரயில்வே நிர்வாகத் துறையின் 14 தணிக்கை அறிக்கைகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்ற நிலையில், இது முந்தைய ஐந்தாண்டு காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட 27 என்ற எண்ணிக்கையை விட குறைவாகும்.
  • தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) என்பது இந்தியத் தணிக்கை மற்றும் கணக்குத் துறைக்கு (IA&AD) தலைமை வகிக்கும் ஒரு அரசியலமைப்பு சார்ந்த பதவியாகும்.
  • CAG மற்றும் IA&AD ஆகிய  இந்த இரண்டு அமைப்புகளும் இந்தியாவின் உயர் நிலை தணிக்கை நிறுவனங்கள் (SAI) என அழைக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்