2023 ஆம் ஆண்டில், தலைமைக் கணக்கு தணிக்கையாளரால் தயாரிக்கப்பட்ட மத்திய அரசின் கணக்குகள் குறித்த 18 கணக்கு தணிக்கை அறிக்கைகள் மட்டுமே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
2019 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சராசரியாக 22 என்ற கணக்கில், கடந்த சில ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இது 2014 மற்றும் 2018 முதல் 2023 வரையிலான ஆண்டுகளுக்கு இடையில் 40 ஆக குறைந்தது.
கடந்த ஐந்தாண்டுகளில் இரயில்வே நிர்வாகத் துறையின் 14 தணிக்கை அறிக்கைகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்ற நிலையில், இது முந்தைய ஐந்தாண்டு காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட 27 என்ற எண்ணிக்கையை விட குறைவாகும்.
தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) என்பது இந்தியத் தணிக்கை மற்றும் கணக்குத் துறைக்கு (IA&AD) தலைமை வகிக்கும் ஒரு அரசியலமைப்பு சார்ந்த பதவியாகும்.
CAG மற்றும் IA&AD ஆகிய இந்த இரண்டு அமைப்புகளும் இந்தியாவின் உயர் நிலை தணிக்கை நிறுவனங்கள் (SAI) என அழைக்கப்படுகின்றன.