உலக சுகாதார அமைப்பானது (WHO) ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) மத்தியக் கிழக்கு சுவாச நோய்க் குறைபாடு என்ற கொரோனா வைரஸ் (MERS-CoV) பாதிப்புப் பதிவாகி உள்ளதாக கண்டறிந்துள்ளது.
MERS-CoV என்பது மத்தியக் கிழக்கு சுவாச நோய்க் குறைபாடு கொரோனா வைரஸ் (MERS-CoV) எனப்படும் கொரோனா வைரஸால் ஏற்படுகிற ஒரு வைரஸ் சுவாச தொற்று ஆகும்.
ஒற்றை திமில் கொண்ட ஒட்டகங்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொள்வதால் மனிதர்கள் மத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது.
அவை MERS-CoV நோய்த் தொற்றின் இயற்கையான நோய்க் கடத்தி மற்றும் விலங்கு வழி நோய் மூலமாகும்.
MERS-CoV வைரஸின் முதல் பாதிப்பானது, ஐக்கிய அரபு அமீரகத்தில் 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளது.