கடந்த ஆண்டு மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (CVC) பதிவான மொத்த ஊழல் புகார்களில், இரயில்வே ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் தான் அதிகமாகும்.
அதனைத் தொடர்ந்து டெல்லியின் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் அனைத்து வகை அதிகாரிகள் /ஊழியர்களுக்கு எதிராக 74,203 ஊழல் புகார்கள் பெறப் பட்டுள்ளன.
66,373 புகார்கள் தீர்க்கப் பட்டு 7,830 புகார்கள் நிலுவையில் உள்ளன.
இரயில்வே ஊழியர்களுக்கு எதிராக அதிகபட்சமாக 10,447 புகார்களும், அதைத் தொடர்ந்து "GNCTD தவிர" பிற உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கு எதிராக 7,665 புகர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டில் பொதுத் துறை வங்கிகளின் ஊழியர்களுக்கு எதிராக 7,004 ஊழல் புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இவற்றில் 6,667 புகார்கள் தீர்க்கப் பட்டு 337 புகார்கள் நிலுவையில் உள்ளன.