அக்சஸ் நௌ நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு முதல் உலகளவில் 1,458 முடக்கங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும், அவற்றில் சுமார் 773 (53%) இந்தியாவில் பதிவாகி உள்ளதாகவும் கூறியுள்ளது.
தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, 2023 ஆம் ஆண்டில் 116 இணைய முடக்கங்களுடன் இந்தியா உலகளாவிய இணைய முடக்கங்களில் முன்னணியில் உள்ளது.
உலகளவில் பதிவான 283 முடக்கங்களில் 41% பங்கினைக் கொண்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், 201 ஆக இருந்த இணைய முடக்கங்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 283 ஆக உயர்ந்தது.
இந்தியாவில், சுமார் 64 இணைய முடக்கங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களை பாதித்தன.
இது மணிப்பூரில் பதிவான 47 இணைய முடக்கங்கள் மற்றும் பஞ்சாபில் ஏற்பட்ட மாநிலம் தழுவிய இணைய முடக்கம் ஆகியவற்றால் குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் 13 மாநிலங்கள் உள்ளூர் அல்லது மாநிலம் தழுவிய அளவில் இணைய முடக்கங்கள் பதிவாகின.
2022 ஆம் ஆண்டில் 3 ஆக இருந்த ஐந்திற்கும் அதிகமான இணைய தள முடக்கங்கங்களுடன் கூடிய இந்திய மாநிலங்களின் எண்ணிக்கையானது 2023 ஆம் ஆண்டில் 7 ஆக அதிகரித்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் 15% ஆக இருந்த ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் நீடித்த இந்தியாவின் அனைத்து இணைய முடக்கங்கள் 41% அதிகரித்தது.
2023 ஆம் ஆண்டில், மியான்மர் 37 இணைய தள முடக்கங்களுடன் இந்தியாவினைத் தொடர்ந்து இடம் பெற்றுள்ளது என்ற நிலையில் அதனைத் தொடர்ந்து 34 இணைய தள முடக்கங்களுடன் ஈரான் இடம் பெற்றுள்ளது.
2023 ஆம் ஆண்டில், 39 நாடுகளில் இணைய முடக்கங்கள் பதிவாகின என்ற நிலையில் பாகிஸ்தானில் 7 இணைய தள முடக்கங்களும், ஈராக்கில் 6 இணைய முடக்கங்களும் பதிவாகின.
இந்தியா உட்பட ஆறு நாடுகளில் பன்னிரண்டு இணைய முடக்கங்கள் தேர்வுகளில் ஏய்ப்பு நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப் பட்டன.